Paaindhu Vaa
By Rajesh Kumar
3/5
()
About this ebook
Reviews for Paaindhu Vaa
1 rating0 reviews
Book preview
Paaindhu Vaa - Rajesh Kumar
http://www.pustaka.co.in
பாய்ந்து வா!
Paaindhu Vaa!
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
விவேக்கும் ரூபலாவும் அந்த மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டரில் ஒரு தமிழ் சினிமாவைப் பார்த்துவிட்டு தியேட்டர்க்குப் பின்புறம் இருந்த கார் பார்க்கிங்கை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
நேரம் ராத்திரி 9.45
தலைக்கு மேலே வானம் லேசாய் தூறிக் கொண்டிருக்க காற்றில் ஏ.ஸி.யின் குளிர்.
ரூபி!
ம்.
"இனிமே தமிழ் சினிமாவையே மறந்துடணும் போலிருக்கு. எப்படி இந்த சினிமாக்காரங்களாலே ஒரே மாதிரி படம் எடுக்க முடியுது…? முகத்தை சவரம் பண்ணாத ஹீரோ, முதுகுக்குப் பின்னாடி ஒரு அரிவாள். ஒரே ஒரு குத்துல எட்டு திசைக்கும் பறந்து போய் விழற வில்லன்கள். நடிக்கத் தெரியாததொப்புள் மட்டும் காட்டத் தெரிந்த ஒரு ஹீரோயின், நம்மை சிரிக்க வைக்கக் கஷ்டப்படற காமெடியன், புரியாத தமிழ்பாட்டு! நூற்றி ஐம்பது ரூபாய் தண்டம். இந்தப் பணத்தை ஏதாவது ஒரு ஆர்பனேஜ் விடுதிக்கு எம்.ஓ. பண்ணியிருக்கலாம்.
ரூபலா சிரித்தாள். சினிமா ஈஸ் சினிமா. தியேட்டர்க்குள்ளே போகும் போதே மூளையைக் கழட்டி கையில் வெச்சுகிட்டுதான் படம் பார்க்கணும். லாஜிக் பார்த்தோம்ன்னா தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பைத்தியம் பிடிச்சுடும். இப்ப நாம பார்த்த படத்துல ஹீரோ அடிக்கடி ஒரு பஞ்ச டயலாக் சொல்வானே… உங்களுக்கு ஞாபகம் வருதா?
ம்… வருது….!
அது என்ன டயலாக்ன்னு சொல்லுங்க பார்க்கலாம்.
நான் பேசினா எல்லார்க்கும் புரியற மாதிரி இருக்கும். ஆனா யோசிச்சு பார்த்தா ஒண்ணுமே புரியாது…!
அட… கரெக்டாய் சொல்லிட்டீங்களே?
எல்லாரும் இப்படி மனப்பாடம் பண்ணி வெச்சுக்கணும்ன்னுதானே அந்த ஹீரோ படத்துல அவ்வளவு தடவை சொல்றான்.
அந்த ஹீரோ சொல்ற மாதிரிதான் படமும் இருக்கு. படத்தைப் பார்க்கும்போது கதை புரியற மாதிரி இருக்கு. படம் முடிஞ்சு வெளியே வரும்போது ஒண்ணுமே புரியலை.
சரி… சரி… இந்த பாடாவதி படத்தை மறந்துட்டு வேற ஏதாவது விஷயம் பேசுவோம். சாப்பிட எந்த ஹோட்டலுக்கு போலாம்?
மழையில் நனைந்து சோடியம் வேபர் விளக்கு வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருந்த காரை நெருங்கிய போது விவேக்கின் செல்போன் ஒலித்தது. கார்க்குள் ஏறி உட்கார்ந்து கொண்டே அழைப்பது யார் என்று பார்த்தான். டிஸ்ப்ளேயில் விஷ்ணுவின் பெயர்.
விஷ்ணு.
குட் ஈவினிங் பாஸ்.
ரூபலா ஏறி உட்கார்ந்ததும் காரை மெல்ல நகர்த்தினான் விவேக்.
சொல்லுடா….!
இப்போ எங்கே இருக்கீங்க பாஸ்… வீட்லயா? வெளியேவா…?
வெளியே…
எங்கே…. ஷாப்பிங்கா…?
ஷாப்பிங் பண்ணத்தான் கிளம்பினோம். மல்ட்டி காம்ப்ளக்ஸுக்கு வந்தபோது ஒரு படம் பார்க்கலாம்ன்னு போய் மாட்டிக்கிட்டு இப்பத்தான் வெளியே வந்தோம்: உன்கிட்டே மாட்டிகிட்டோம்.
இன்னும் டின்னர் சாப்பிடலையே?
இனிமேத்தான்!
தேங்க் காட்…!
ஏண்டா கடவுளுக்கு நன்றி சொல்றே?
பாஸ்! இன்னிக்கு நீங்களும் ரூபலா மேடமும் என்னோடுதான் டின்னர் சாப்பிடப் போறீங்க…
இன்னிக்கு என்னடா விசேஷம்…?
பாஸ்….! இன்னிக்கு ஒரு புனித நாள்… அன்பும் அஹிம்சையும் அவதரித்த நாள். வீரமும் விவேகமும் விளைந்த நாள்.
டேய் இன்னிக்கு மே பத்தாம் தேதி. அக்டோபர் 2-ம் தேதி தானே காந்தி பிறந்தார்… மே பத்து யாரோட ஃபர்த்டே…
பாஸ்…1 காந்தி பிறந்தது அக்டோபர் ரெண்டு. இந்த விஷ்ணு பிறந்தது மே பத்து.
ஓ…! இன்னிக்கு உன்னோட பிறந்த நாளா? என்னடா…. இவ்வளவு லேட்டா சொல்றே…?
என்ன பண்றது பாஸ்…! சாயந்தரம் ஏழு மணிக்கு மேல் தான் எனக்கே இன்னிக்கு என்னோட பிறந்த நாள்ன்னு ஞாபகத்துக்கு வந்தது. உடனே உங்க செல்போனை காண்டாக்ட் பண்ணினேன். நீங்க சினிமா தியேட்டர்ல இருந்ததால செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சிருந்தீங்க போலிருக்கு…! பாஸ்….. நீங்க மேடத்தைக் கூட்டிகிட்டு ஹோட்டல் மான்செஸ்டர்க்கு வந்துடுங்க. இன்னிக்கு ஒண்ணா உட்கார்ந்து டின்னர் சாப்பிடுவோம்.
டேய் விஷ்ணு…! இப்பவே மணி பத்தாகப் போகுது… உன்னோட பர்த்டே பார்ட்டியை நாளை வெச்சுகிட்டா என்ன?
இல்ல பாஸ்…! நான் இங்கேடேபிள் ரிசர்வ் பண்ணிட்டேன். வந்துடுங்க…! அயாம் வெயிட்டிங். லேட் பண்ணிடாதீங்க
விஷ்ணு செல்போனை அணைத்துவிட விவேக் ரூபலாவைப் பார்த்தான்.
விஷ்ணுவுக்கு இன்னிக்கு ‘பர்த்டே’யாம். அவன்கூட உட்கார்ந்து டின்னர் சாப்பிடணுமாம்…
எந்த ஹோட்டல்?
மான்செஸ்டர்.
அது எங்கே இருக்கு…?
"ரேஸ்கோர்ஸ் ரோட்லகலெக்டர் பங்களாவுக்குப்