Puthumai Ulagam
By Rajesh Kumar
4.5/5
()
About this ebook
Reviews for Puthumai Ulagam
2 ratings0 reviews
Book preview
Puthumai Ulagam - Rajesh Kumar
http://www.pustaka.co.in
புதுமை உலகம்
Puthumai Ulagam
Author :
ராஜேஷ் குமார்
Rajesh Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
1
ஒரே வினாடியில் நூற்றுக் கணக்கான கண்ணாடி டம்ளர்கள் மொசைக் தரையில் விழுந்து சிதறின மாதிரி ஆரவாரம். சீரான கைத்தட்டல், சந்தோஷம் எம்பல்கள், உதட்டில் ஒட்ட வைத்த புன்னகைகள்.
புரொபசர் ஆத்மாவும், அர்ச்சனாவும் மேடையேறினார்கள். மேடையைச் சுற்றி வியூகம் போட்டிருந்த பத்திரிகை நிருபர்கள் ஃபிளாஸ் காமிராக்களை இயக்க செயற்கை மின்னல்கள் ஏராளமாய் நெளிந்தன. பிரசிடெண்ட் ஹால் பூராவும் சரம் சரமாய் ஊதாவிலும், பச்சையிலும் கலர் பல்புகள் காய்த்து தொங்க, வெளியே ரோட்டோரமாய் கார்கள் மந்தை மந்தையாய் தெரிந்தன.
புரொபசர் ஆத்மா மைக்கை கையில் ஏந்தினார். ஆத்மா நல்ல உயரம். தொண்ணூறு சதவிகித வழுக்கை. காதோர மாய்க் கொஞ்சம் நரை மயிர். வெள்ளி பிரேமிட்ட மூக்குக் கண்ணாடிக்குள் பெரிதாய் தெரியும் விழிகள். நுரையோடிய பிரஷ் மீசை. கருநீல நிற ஃபுல் சூட்டில் ட்ரிம்மாய் தெரிந்தார்.
டியர் கலீக்ஸ், மும்பையிலிருந்து என்னையும், என் மகள் அர்ச்சனாவையும் வரவழைத்து வரவேற்பு கொடுத்திருக்கிறீர்கள். நன்றி. கம்ப்யூட்டர் துறையில் ஈடுபட்ட அனைவருமே ஒரே இடத்தில் கூடப் பேசுவது என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம். நான் தற்சமயம் புதிதாய் உருவாக்க ஆரன்பித்திருக்கும் ‘கம்ப்யூட்டரைஸ்ட் ஆக்ஸியல்டோமோகிராபி’ என்னும் கம்ப்யூட்டரைப் பற்றி ஒரு முப்பது நிமிடம் பேசிவிட்டு உங்களுடைய சந்தேகங்களுக்கு வருகிறேன்.
ஆத்மா பேச ஆரம்பித்தார்.
டைப் செய்யப்பட்ட காகிதங்கள் அவர் கையிலே புரண்டு கொண்டிருந்தன.
ஹாலின் ஏறக்குறைய கடைசி சீட்களில் உடம்புகளைச் சாய்த்திருக்க புரொபசர் ஜெகதீஸும், அவருடைய அஸிஸ்டெண்ட் ப்ரவீணும் சிகரெட் புகைக்காக வெளியிலே வந்தார்கள். முகங்களில் கோபம் படர்ந்திருந்தது.
கிழவன் அசாத்தியப் பேர்வழி. கம்ப்யூட்டரை நமக்கு முன்னாடி பெத்துடுவான் போலிரக்கு
– ஜெகதீஸ் சொல்லிக் கொண்டே உதட்டுக்கு சிகரெட்டைக் கொடுத்து விட்டு கோட் பையில் லைட்டரைத் தேடினார்.
காலை பேப்பரைப் பார்த்தீங்களா சார்? கம்ப்யூட்டர் இன்னும் ரெண்டே மாசத்துலே டெமான்ஸ்ட்ரேஷனுக்கு வந்துடுமாம். ‘ஹிண்டு’விலே பேட்டி கொடுத்திருக்கு கிழம்.
லைட்டரைக் கிளக்கி நெருப்பு ஜுவாலையை உதிக்க வைத்து சிகரெட் தலையைப் பொசுக்கி அடர்த்தியாய்ப் புகை விட்டார் ஜெகதீஸ்.
கிழவன் ரெண்டு மாசத்துலே அந்தக் கம்ப்யூட்டரை டெமான்ஸ்ட்ரேஷனுக்கு கொண்டு வந்தால் நிச்சயம் கம்ப்யூட்டர் கவுன்சில் நேஷனல் அவார்டை அதுக்குக் கொடுத்திடும். சை!
எரிச்சல் ஜெகதீஸை தத்து எடுத்துக் கொண்டது.
நாம எங்கேயோ தப்புப் பண்றோம் சார். எந்த்ச் சேனல்ன்னுதான் தெரியலை. எலக்ட்ரானிக் சர்க்யூட்ல பூராவுமே அற்புதமாக வேலை செய்யுது. ஆனால் பைனல் சேனல்ல ரிசல்ட் கொலாப்ஸ் ஆயிடுது.
மைக்ரோ பிராஸஸர்ல எரர்ஸ் வர சான்ஸ் இருக்கு. நாளைக்கு ஒரு தபா பிரிச்சு மேய்ஞ்சுடு ப்ரவீண்.
ஸாரி ஸார்.
இன்புட் டெர்மினல் எவ்வளவு வோல்ட்டேஜ் போகுது?
நார்மல் வோல்ட்டேஜ் சார்…
மெள்ளமாய்ப் புகைவிட்டார் ஜெகதீஸ். நாற்பது வயதை அடுத்த மாதம் தொடப் போகும் ஜெகதீஸ் தலை நரைக்க ஆரம்பித்து டை அடித்து தற்காலிகமாய் அதன் மானத்தைக் காப்பாற்ற முயற்சித்தார். மீசையை மெலிதாய் ஜாக்கிரதை உணர்வாடு செதுக்கியிருந்தார்.
எக்ஸ்யூஸ்மி சார். குட் யூ கிவ் மீ யுவர் லைட்டர் ப்ளீஸ்…
தன் முதுகுக்குப் பின்னால் குரல் கேட்டுத் திரும்பினார். ஜெகதீஸ். வலது தோள்பட்டையில் யாஷிகா காமெரா தொங்கி கொண்டிருக்க. இடது கை விரல்களில் சிகரெட்டோடு நின்றிருந்தான் ஜவஹர். சந்தன வண்ண சஃபாரியில் எடுப்பாய்த் தெரிந்தான்.
நீங்க பிரஸ்ஸிலிருந்து’ வர்றீங்களா?
ஆமாம்.
எந்த மாகஸின்?
சுpரித்தான் ஜவஹர்.
ஒரு குறிப்பிட்ட எந்த பத்திரிகைக்கென்றும் நான் ஒர்க் பண்றதில்லை. நான் ஒரு பிரைவேட் பிரஸ் போட்டோ கிராபர். எந்தப் பத்திரிகைக்கு வேண்டுமானாலும் என்னோட காமெரா பிளாஷ் அடிக்கும். பை த பை ஐ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்?
புரொபசர் ஜெகதீஸ்!
ஐ யாம் ஜவஹர். க்ளாட் டு மீட் யூ ஸார்!
ஹி ஈஸ் மை அஸிஸ்டெண்ட் ப்ரவீண்.
ப்ரவீணின் கையைப் பற்றிக் குலுக்கினான் ஜவஹர். ப்ரவீண் கட்டாயமாய்ப் புன்னகைத்தான். ஜவஹர் ஜெகதீஸ் பக்கமாய்த் திரும்பினான்.
நீங்களும் கம்ப்யூட்டர் கன்வர்சன்ல இருக்கீங்களா சார்?
உம்…
புரொபசர் தயாரிக்கப் போகிற இந்த டோமோகிராபி மைக்ரோ போட்டோ கம்ப்யூட்டர் சாத்தியமா சார்?
சாத்தியம்தான்.
"எனக்கென்னமோ டவுட்டா இருக்கு