Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannalaney
Kannalaney
Kannalaney
Ebook117 pages1 hour

Kannalaney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs Vimala Ramani is a graduate of Madurai Kamarajar University. She also holds a highest degree Hindi Praveen. Her name is familiar to anyone who has read Rani, Kumudum or Kalki in the last 50 years. With more than 1,000 short stories and 700 novels to her credit. More than 600 dramas have been broad casted on AIR Trichy and Coimbatore.
She has won many laurels for her stories and novels. The title of-Ezuthu Sudar was conferred on her by-Urattha chinthanai. Outstanding novelist award was given to her by Rotary club of Coimbatore. She was honoured by V G P award also. She has also got other titles like Novel arasi, Pudinaperarasi, Manida neya manpalar and Samuganala thilagam. She has participated in many seminars conducted by Unicef, Air Chennai and Sahitya Academy. Her dramas and serials have been telecasted in Chennai Doordarshan.
Her Novels have been translated and published in Vanitha (Malayalam) Raga Sangama (Kannada), Mayura (Kannada) and Sudha (Kannada).
She has stage experience as a drama script writer and director. She had a dramatic troupe named Navaratna in late seventies. Her Novel - Ula Varum Urayugal has been pictured in the name of Kanne Kaniyamude in late seventies.
Sri Ramakrishna Mission Vidyalayam conferred on her Sadanai Magalir award for Tamil literature. She has participated in the World Tamil conference held at Coimbatore and submitted an article on feminism.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100800036
Kannalaney

Read more from Vimala Ramani

Related to Kannalaney

Related ebooks

Reviews for Kannalaney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannalaney - Vimala Ramani

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    கண்ணாளனே

    Kannalaney

    Author :

    விமலா ரமணி

    Vimala Ramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    வித்யாவின் முகத்தில் அப்பி இருந்த வெட்கத்தைப் பார்த்து விநோத் வியந்தான்.

    செய்தி தெரியுமா? வெட்கத்துடன் கேட்டாள், வித்யா.

    சொன்னாத்தானே தெரியும்.

    சொல்லட்டுமா? பாடட்டுமா?

    பாடப்போறியா? இல்லை ‘சொல்லட்டுமா சொல்லட்டுமா ரகசியத்தைச் சொல்லட்டுமா’ன்னு பாடப் போறியா?

    வரவர பழைய படங்கள் அதிகமா பார்க்கத் தொடங்கிட்டீங்க.

    சரி சரி… சங்கதி என்ன சொல்லு.

    இப்போ இந்த வீட்டிலே எத்தனை பேர் இருக்கோம்?

    இதென்ன கேள்வி? நீயும் நானும். நீ பாதி… நான் பாதி…

    இனிமே மூணாவது உறவு வரப்போகுது…

    மூணாவதா…?

    என்னங்க நீங்க? இதைக் கேட்டவுடனே சினிமாவுல வர்ற மாதிரி ‘அடிக் கள்ளி’ன்னு என் கன்னத்தைக் கிள்ளுவீங்கன்னு நினைச்சேன்…

    சீ… கிள்ளினா வலிக்கும்… ஆனா இந்த கிள்ளலும்… துள்ளலும்… என்றவன், திடீரென்று வியப்புடன் வித்யாவைப் பார்த்தான்.

    இப்பத்தான் டாக்டரைப் பார்த்தேன். உங்க கரு என் வயித்துலே வளருது…

    இந்தக் கரு வேண்டாம்… கலைச்சுடு.

    என்னது? வித்யா, அதிர்ந்துபோய் கேட்டாள்.

    வேண்டாம் வித்யா… இப்போ வேண்டாம்… நமக்கு இன்னும் நிறைய காலம் இருக்கு. அப்போ பார்த்துக்கலாம்… இப்போ குழந்தை வேண்டாம்…

    மூன்றாவது உறவு வரப்போகிறது என்று கனவு கண்டாளே! அது கருவிலேயே கலையப்போகிறதா?

    வித்யாவின் கண்ணீருடன் கடந்த காலமும் கலந்து வந்தது.

    2

    எல்லோரும் காதலிப்பதைப் போல்தான் அவர்களும் காதலித்தார்கள். பேருந்துநிலையத்தில் தொடங்கி, கடற்கரையில் காற்று வாங்கி, படகோரம் பதுங்கி, ஓட்டலில் ஒரே தம்ளரில் இரண்டு குழல் போட்டு பழரசத்தைக் காதல் பொங்க உறிஞ்சினார்கள். தங்கள் காதல், கடற்கரை அலையில் அழியக் கூடிய காதல் அல்ல! மணல் கோபுரம் அல்ல… கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய காதல் என்று நினைத்தார்கள்.

    விநோத், பணக்கார வீட்டுப் பையன். படிப்பது அவனுக்குப் பொழுதுபோக்கு. வித்யாவும் ஓரளவு வசதிபடைத்தவள்தான். தன் தாயுடன் தனித்து வாழ்பவள். தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத் தனியார் நிறுவனம் ஒன்றில் கணிப்பொறியாளராகப் பணிபுரிகிறாள்.

    பொழுதுபோகவில்லை என்றால் கணிப்பொறியில் விளையாடுவாள். ‘சாட்’ எனப்படும் இணையவலைக் கலந்துரையாடலில் கலந்துகொள்வாள்.

    இப்படி ஒரு நாளில்தான் ‘சாட்’டில் விநோத் சிக்கினான்.

    ஐஸ்வரியாராயும் அமீர்கானும் விளம்பரத்தில் இணைய வலையில் காதலித்து கையில் குளிர்பானத்துடன் சந்தித்துக் கொள்வதைப் போல்தான் இவர்களும்.

    இவர்கள் சந்தித்த இடம்…

    அது ரகசியம்… கடைசியில் தெரியும்.

    காதல் வளர்ந்து… செடியாகி… மரமாகி… பூத்து, காயாகி, கனியாகிற நேரம்…

    விநோத் ஏனிப்படி நடந்துகொள்கிறான்? யோசித்தாள்.

    காதலுக்காகத்தானே தன் பெற்றோரைப் பகைத்துக்கொண்டு தனக்கு எதுவும் வேண்டாம்… காதலே போதும் என்று கிளம்பி வந்தாள்!

    இன்னும் நினைவு இருக்கிறது… இவர்கள் ஒரு கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு மாலையும் கழுத்துமாய் விநோத்தின் வீட்டு வாசலில் நுழையும்போதே அவன் தந்தை, வேட்டைத் துப்பாக்கியுடன் வெளிப்பட்டார்!

    ‘ஏதோ நாய் வந்திருக்கிறதுன்னு காவலாளி சொன்னான்! நீயா? நான் மனுசங்களை வேட்டையாடுறதில்லை.’

    வார்த்தைகளால் வேட்டையாடிவிட்டுப் போய்விட்டார், அவன் தந்தை விக்ரம்தாஸ். இவள், மனதுக்குள் சித்திரவதைப் பட்டுப்போனாள்!

    அடுத்து, வித்யாவின் வீட்டை மாலையும் கழுத்துமாய் அடைந்தபோது, பூட்டிய வீடு இவர்களை வரவேற்றது.

    இவர்கள் தனித்துவிடப்பட்டனர். விநோத்திடம் பணம் இருந்தது. தொடக்க கால கஷ்டங்கள் அவ்வளவாகத் தெரியவில்லை. இவளின் சம்பளமும் இருந்தது.

    நண்பர்களின் உதவியால், ஊருக்குக் கொஞ்சம் தள்ளி நங்கநல்லூரில் ஒரு தனி வீடு பார்த்துக்கொண்டார்கள். ஆயிரம் ரூபாய் வாடகை. பத்து மாத முன்பணம். அவசியத் தேவை சாமான்கள் என்று பட்டியலிட்டதில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் வரை போய்விட்டது.

    விநோத்தின் முகத்தில் துளிக்கூட வேதனைக் கோடுகள் விழவில்லை.

    ‘வாழ்க்கையிலே நாம சாதிச்சுக் காட்டணும். வெற்றி பெற்றவர்கள் தம் தோல்விகளைப் பற்றி நினைப்பதில்லை. வெற்றிகளைப் பற்றித்தான் நினைக்கிறார்கள். தங்கச்சுரங்கத்தில் மணலையும் சேர்த்துத்தான் தோண்ட வேண்டும். எத்தனை டன் மணல் எடுத்தோம் என்றா கணக்கு பார்க்கிறோம்? எத்தனை கிலோ தங்கம் எடுத்தோம் என்றுதானே கணக்குப் போடுகிறோம்’ இப்படிப் பேசியவன்தான், விநோத்.

    இன்று இவள், தங்கம் எடுக்கப்போவதாகச் சொன்னால், ஏன் இப்படி தங்கச் சுரங்கத்தையே சுரண்டி அழிக்கச் சொல்கிறான்?

    வித்யாவிற்கு அழுகை வந்தது.

    சற்றே மறந்திருந்த ஒரு சொல். இத்தனை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நினைவுக்கு வந்தது.

    அம்மா…ஆ…

    வித்யா அழுதாள்.

    3

    வித்யா, அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தாள். சில தினங்களாக சோம்பலாக இருக்கிறது. கூடவே வாந்தியும் தொடங்கி

    Enjoying the preview?
    Page 1 of 1