Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathirundhean sakiye…
Kaathirundhean sakiye…
Kaathirundhean sakiye…
Ebook519 pages4 hours

Kaathirundhean sakiye…

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580109201628
Kaathirundhean sakiye…

Read more from Infaa Alocious

Related authors

Related to Kaathirundhean sakiye…

Related ebooks

Reviews for Kaathirundhean sakiye…

Rating: 4.0212765957446805 out of 5 stars
4/5

47 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathirundhean sakiye… - Infaa Alocious

    http://www.pustaka.co.in

    காத்திருந்தேன் சகியே...

    Kaathirundhean sakiye…

    Author :

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    http://www.pustaka.co.in/home/author/infaa-alocious

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காலம் – 1

    காலம் – 2

    காலம் – 3

    காலம் – 4

    காலம் – 5

    காலம் – 6

    காலம் – 7

    காலம் – 8

    காலம் – 9

    காலம் – 10

    காலம் – 11

    காலம் – 12

    காலம் – 13

    காலம் – 14

    காலம் – 15

    காலம் – 16

    காலம் – 17

    காலம் – 18

    காலம் – 19

    காலம் – 20

    காலம் – 21

    காலம் – 22

    காலம் – 23

    காலம் - 24

    காலம் – 25

    காலம் – 26

    காலம் – 27

    காலம் – 28

    காலம் – 29

    காலம் – 30

    காலம் – 31

    காலம் – 32

    காலம் – 33

    காலம் – 34

    காத்திருந்தேன் சகியே...

    காலம் – 1

    காலங்கள் கடந்தாலும்,

    கனவுகள் சிதைந்தாலும்

    காத்திருந்தேன் சகியே....

    உனக்காக........

    இதழ்களைக் குவித்து, சீட்டி அடித்தவாறு..., காண்ணாடியைப் பார்த்து..., தன் தாடையை மழித்துக் கொண்டிருந்தான் ஸ்டான்லி அரவிந்த். ஆறடி உயரம்..., ஆங்கிலோ இந்திய தாய்க்கும்...., தமிழ்நாட்டுத் தந்தைக்கும் பிறந்ததால்...., சப்பாத்தி நிறத்தில்..., நீல விழிகளோடு..., சுருட்டைத் தலைமுடியோடு...,

    கன்னக் குழியுடன்..., அளவான அடர்த்தியான மீசையுடன், தினமும் உடற்பயிற்சி செய்வதால்..., கட்டுடலுடன் சிக்கென இருந்தான். பார்க்கும் பெண்கள் அனைவரையும்..., ஒரு நொடியில் வசீகரிக்கும் தன்மை அவனிடம் இருந்தது.

    பெண்ணாகப் பிறந்திருந்தால்..., கண்டிப்பாக ஒருடஜன் ஆண்மகன்களின் தூக்கத்தையாவது கெடுத்திருப்பான். ஆனால் ஆணாகப் பிறந்ததால் அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

    சீழ்க்கையை நிறுத்தாமலேயே தாடையை மழித்து முடித்தவன், ஆப்டர் ஷேவிங் லோஷனை தாடையில் தேக்க..., ஸ்..ஆ..., அது கொடுத்த எரிச்சலில் சன்னமாக ஒலி எழுப்பியவன்..., உற்சாகம் குறையாமலேயே ஷவரின் அடியில் நின்றான்.

    அம்மா..., என்ன.. குளிருடா சாமி..., ஷவரில் இருந்து பொழிந்த நீர், சில்லென்று உடலை நனைக்க, வாய்விட்டு சொன்னவன்..., உடலைச் சிலிர்த்தவாறு, அந்த குளிரை அனுபவித்துக் குளித்து முடித்தான்.

    அறைக்குள் நுழைந்து..., ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த அடர் நீலநிற சட்டையும், சாம்பல் வர்ண பேண்ட்டையும் மாட்டியவன், சட்டையின் வர்ணத்தில் இருந்த புள்ளி போட்ட டையை எடுத்து காலரில் சுற்றியவன்..., நொடியில் முடிச்சிட்டு முடித்துவிட்டு, கண்ணாடியின் முன்னால் சென்று நின்றான்.

    அங்கே இருந்த வாசனை திரவியத்தில் இரண்டு துளி மட்டும் சட்டையில் தெளிக்க..., அதன் வாசனை அந்த அறையை ரம்யமாக நிறைத்தது. உள்ளங்கையில் ஆக்ஸ் பௌடரை தட்டியவன், லேசாக முகத்துக்கு போட்டுவிட்டு, மீதியை கைக்குட்டையில் தடவிக் கொண்டான்.

    கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை ஒரு முறை நின்று ஆராய, திருப்தியாக புன்னகைத்துக் கொண்டான். ஸ்மார்ட்யா..., தனக்குத் தானே பாராட்டிக் கொண்டான்.

    மேஜைமேல் இருந்த தன் ஆப்பிள் லேப்டாப்பை பேகில் வைத்தவன்..., ஐபோன்னை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். ஒருலட்சம் விலை மதிப்புள்ள கை கடிகாரம் அவன் இடக்கரத்தில் இடம் பிடிக்க, ஒரு பக்கா ஐடி ப்ரொஃபஷனல் இளைஞனாக உரு மாறியவன், அறையிலிருந்து வெளியேற முயன்றான்.

    அப்பொழுது கை அனிச்சையாக பேண்டின் பின் பாக்கெட்டுக்குச் செல்ல, பர்ஸ்..., ஷேவ் செய்ததால்..., கருமையோடி இருந்த தன் தாடையைத் தடவி யோசித்தவன்..., டேபிளின் டிராயரைத் திறந்து பார்க்க..., அங்கே பத்திரமாக பதுங்கி இருந்தது அது.

    வேகமாக எடுத்து பாக்கெட்டுக்குள் வைக்கப் போனவன்..., நிதானமாக அதைப் பிரித்துப் பார்த்தான். மணக்கோலத்தில் தலை கவிழ்ந்து தன் அருகில் அமர்ந்திருந்த அவள் முகத்தை வலதுகை பெருவிரலால் நிதானமாக வருடியவன்,

    அபி..., உனக்குமட்டும் ஏன் என்னைப் பிடிக்கவே இல்லை..., என்னைக்காவது உனக்கு என்னைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்தான் இன்னும் நான் காத்துட்டே இருக்கேன்..., வாய்விட்டு புலம்பியவன், சட்டென தன் எண்ணத்தில் இருந்து தலையை உலுக்கி வெளியேறியவன், அறையிலிருந்தும் வெளியேறினான்.

    அவ்வளவு நேரம் இருந்த உற்சாகம் அனைத்தும் சூரியனைக் கண்ட பனித்துளியாக வற்றிப் போக, மனம் ஒரு நொடியில் கனத்துப் போனது. ‘அபி.., அபி...’, என மனம் அடித்துக் கொண்டது.

    ‘ஏன் அவளுக்கு என்னை சுத்தமாகப் பிடிக்கவில்லை...? பார்க்க நான் அழகில்லையா...? என்னிடம் பணமில்லையா...? குணமில்லையா...? பிறகு ஏன்...?’, மூன்று வருடமாகத் தன் தூக்கத்தைக் கெடுக்கும் அதே கேள்வி..., ஒரு பெருமூச்சொன்று வெளியேறியது அவனிடமிருந்து.

    என்னங்க இது...? இன்னும் சின்னப் பையன் மாதிரி தலையை கூட ஒழுங்கா துவட்டாமல் வந்து உக்காந்து இருக்கீங்க. சரி இருங்க..., நான் போய் டவ்வல் எடுத்துட்டு வாரேன்..., போலியாக அலுத்துக்கொண்ட நேன்ஸி..., டவ்வலை எடுத்துவந்து தன் கணவனின் தலை துடைக்க,

    அப்போதானே நீ எனக்கு துவட்டி விடுவ, அதான். நான் துவட்டிவிடுன்னு சொன்னால் நீ கேப்பியா...? அதுக்குதான், குழந்தையின் குதூகலத்துடனும், சீண்டலாகவும் உரைத்தார் வேலவன். தாய் தந்தையின் பேச்சில் தன் கவனம் கலைந்த ஸ்டான்லி..., எப்பொழுதும் போல்..., அவர்களின் அன்னியோனியம் அவனைக் கவர்ந்தது.

    ஸ்டான்லியின் பெற்றோர் காதல் மணம் புரிந்தவர்கள். தாய் கிறிஸ்த்தவள் , தந்தை இந்து. நேன்ஸியின் அழகிலும், பண்பிலும் கவரப்பட்டு, வேலவன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

    நேன்ஸியின் வீட்டில் அவர்களது திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆனால் வேலவன் வீட்டில் அவரை அடியோடு ஒதுக்கி வைத்துவிட்டார்கள். அதிலும் வெள்ளைக்காரியை..., நேன்ஸி ஆங்கில தாய்க்கும், இந்திய தகப்பனுக்கும் பிறந்தவள், அதை அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை.

    நேன்ஸியை திருமணம் செய்தது பிடிக்காமல்..., அப்படியே ஒதுங்கி விட்டார்கள். நேன்ஸியும் எவ்வளவோ முறை..., வேலவனின் பெற்றவர்களை சந்தித்து சமாதானம் செய்ய முயன்றார்.

    ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் ஒத்துவரவே இல்லை. இறுதியில்..., அவர்கள் அப்படியே ஒதுங்கிவிட, நேன்ஸியின் தந்தை இறந்தவுடன், தாய் லண்டனில் தன் இறுதி காலத்தை, தன் பிறந்த மண்ணில் கழிக்க வேண்டி..., அவரது தம்பியோடு போய் விடவே..., சொந்தங்கள் யாரும் இல்லாமல் தனித்து வாழ்ந்தார்கள்.

    ஸ்டான்லியும் ஒற்றை பிள்ளையாக போய்விட, பெற்றவர்களின் காதலும் நெருக்கமும் கூடியதே தவிர குறையவில்லை. வேலவனின் காதல் இப்பொழுது கூட கொஞ்சம் கூட குறையாமல்..., நேன்ஸியின் மேல் இருந்தது.

    நேன்ஸியும்..., வேலவனைவிட ஒரு படி அதிகமாகவே அவரை நேசித்தார். அதிலும்..., தனக்காக பெற்றவர்களையே எதிர்த்தார் என்பதில்..., நேன்ஸிக்கு அவர் அன்பில்மேல் அவ்வளவு கர்வம்.

    அவர்களைப் பற்றியே எண்ணியவாறு.., குட் மோர்னிங் அம்மா, அப்பா..., தாயை தோளோடு கட்டிக் கொண்டு, மெல்ல அணைத்து விடுவித்தான் ஸ்டான்லி. தந்தையின் அருகில் சென்று அமர, நேன்ஸி அவனுக்கு உணவு பரிமாறினார்.

    என்னம்மா காலையிலேயே ரொமான்ஸா...?, ஸ்டான்லி கேட்க..., படவா உத வாங்கப் போற..., முதல்ல சாப்பிடு..., இட்டலிக்கு சட்டினியை ஊற்றியவாறே சொன்னார்.

    நீயும் உக்கார் நேன்ஸி..., வேலவன் அவரையும் அருகே அமர வைக்க, நேன்ஸியும், வேலவனும் முதல் வாய் சாப்பாட்டை ஒருவருக்கு ஒருவர் கைகளில் பரிமாறிக் கொண்டார்கள்.

    அப்பா..., இன்னைக்கு அம்மாவுக்கு ஊட்டி விடுங்கப்பா..., தந்தையை உலுக்க, சும்மா இரு ஸ்டான்லி..., நேன்ஸி அவனை அடக்கினார்.

    அம்மா முந்தியெல்லாம் நீங்க அப்படித்தானே சாப்பிடுவீங்க. பிளேஸ்ம்மா, எனக்காக..., இன்னைக்கு..., நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அதான்.., ப்ளீஸ்..., கெஞ்சினான்.

    எங்களுக்கு என்ன வயசு திரும்புதா..? பேரன் பேத்திக்கு ஊட்டிவிட வேண்டிய வயதில்..., நேன்ஸி கண்டிக்கும் குரலில் உரைத்தார்.

    அம்மா..., அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்...? எனக்காக ப்ளீஸ்ம்மா..., அவன் விடாமல் கெஞ்ச,

    நேன்ஸி.., அதான் குழந்தை அவ்வளவு ஆசைப்படுறானே..., வேலவன் உரைக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு..., ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொண்டார்கள்.

    லவ் யூ மாம்.., இதுதான்..., இந்த புரிதல்தான் உங்ககிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சது...., அவன் குதூகலமாக உரைக்க, பெற்றவர்களின் பார்வையோ..., அவன் தட்டின் ஓரத்தில் இருந்த முதல் வாய் இட்டலியின் மீது நிலைத்தது.

    அவர்கள் பார்வையை உணர்ந்தவன்..., எல்லாம் சரியாயிடும்மா..., தலை கவிழ்ந்து உரைத்தான்.

    பெற்றவர்கள் இருவரும் எழுந்து அவனை இரண்டு பக்கமும் நின்று அணைத்துக் கொள்ள..., அனைவரின் மனமும், கண்களும் கலங்கியது.

    நோ மாம்..., எல்லாம் சரியாயிடும். இன்னும் கொஞ்ச நாளில்..., உங்க மருமக உங்களோட வந்து இருப்பா. என்னோட முதல் வாய் சாப்பாட்டை உங்கள் முன்னாடியே..., அவளுக்கு நான் ஊட்டி விடுவேன். அது கூடிய சீக்கிரம் நடக்கும் பாருங்க..., பெற்றவர்களுக்கு நம்பிக்கை அளித்தான்.

    அவர்கள் அவனை நம்பிக்கையில்லாமல் பார்க்கவே..., அவர்களை இருக்கையில் அமரச் சொன்னவன்..., "அம்மா..., இன்னைக்கு நான் புது கம்பெனிக்கு வேலைக்குப் போறேன். இருங்க..., நான் சொல்லி முடிச்சுடுறேன். அங்கே நான்தான் ப்ராஜெக்ட் மேனேஜெர்.

    ஒரு சவாலான வேலை. இது நல்லபடியா முடிந்தால்..., இழுத்தவன், இல்ல..., எல்லாம் நல்லபடியா முடியும்..., என்னை ப்ளஸ் பண்ணுங்க..., சொன்னவன் தாயின் காலைத் தொட்டு வணங்க..., மறுத்து எதுவும் சொல்ல முடியாமல், அவன் நெற்றியில் சிலுவை வரைந்தார் நேன்ஸி.

    என்னப்பா திடீர்ன்னு...?, வேலவன் அவனைத் துருவ,

    அவன் என்ன செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் விடுங்க.., நேன்ஸியின் பதிலில், மறு வார்த்தை பேசவில்லை வேலவன்.

    ஸ்டான்லி..., நீ சந்தோஷமா இருப்பதை நாங்க பாக்க காத்துட்டு இருக்கோம். உனக்கு நல்லது செய்தோமா...? இல்ல கெடுதலான்னு இன்னும் எங்களுக்குப் புரியவே இல்லை...., பெருமூச்செறிந்தார் வேலவன்.

    "அப்பா ப்ளீஸ்...., இப்படியெல்லாம் சொல்லாதீங்க. எத்தனை பேருக்கு இப்படி ஒரு அப்பா அம்மா கிடைப்பாங்க...? மகன் மனசுக்குள் நினைப்பதைக் கூட நிறைவேற்றி வைக்கும் பெத்தவங்க எல்லோருக்கும் கிடைக்க மாட்டாங்க.

    ஆனா..., எனக்கு அப்படி இல்லை. சிறந்த வழிகாட்டி, பாதுகாப்பாளர், பக்கபலமான துணை..., இப்படி எல்லாமா நீங்க இருக்கீங்க..., நம்மளை சரியா புரிஞ்சுக்காமல் போனவங்களை நாம என்ன செய்ய...? ஆனா இதுக்குமேல நான் சும்மா இருக்குறதா இல்ல, உறுதியாக உரைத்தவன், தொடர்ந்து...,

    "தங்களோட பையனோட ஆசைக்காக..., அவன் விருப்பத்தை மதித்து, சூழலை புரிந்துகொண்டு, இருபத்தி மூணு வயசில், எந்த அம்மாப்பா கல்யாணம் செய்து வைப்பாங்க...? ஆனா நீங்க எனக்காக செய்தீங்க. இப்போ தான் எனக்கு இருபத்தி ஆறு வயசாகுது. எனக்கு இன்னும் வயசிருக்குப்பா.

    ஆனா..., இதுக்குமேல..., அவளை தனியா விட்டு, அவங்க அம்மா அப்பாவை என்னால் தவிக்க வைக்க முடியாது அதான்... , நெகிழ்வாகத் துவங்கி..., உறுதியாக முடித்தான்.

    சரி சரி...., பேசிட்டே இருந்ததில் சாப்பாட்டை பாதியிலேயே நிறுத்தியாச்சு. முதல்ல சாப்பிடுங்க..., நேன்ஸி நினைவுபடுத்தவே, மீண்டும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்கள்.

    சாப்பிட்டு முடித்து கை கழுவியவன்..., அம்மா..., கொஞ்சநாள் நான் உங்களோட ஸ்விப்ட்டை யூஸ் பண்ணுறேன். நீங்க என்னோட காரை எடுத்துட்டு போங்க..., சொன்னவன்..., தாயின் பதிலை எதிர்பாராமல், கார் கீயை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தான்.

    அவனைத் தடுக்கப் போன வேலவன்..., நேன்ஸி எதுவும் சொல்லாமல் இருப்பதைப் பார்த்தவர்..., என்ன..., அம்மாவுக்கும் பையனுக்கும் இன்னும் அந்த ரகசியம் பேசுறது மட்டும் நிக்கவே இல்லை போல...., நேன்ஸியிடம் கேட்டார்.

    ஏன்..., உங்களுக்கு பொறாமையா இருக்கா என்ன...?, கேட்டவர், சாப்பிட்ட தட்டுக்களை ஒதுக்க, சமையலறையில் இருந்து வேகமாக வந்த கனி அவற்றை எடுத்துச் சென்றாள்.

    எனக்கென்ன பொறாமை..., எல்லாம் நல்லபடியா முடியணுமேன்னு அக்கறைதான் வேற எதுவும் இல்லை..., அவர் பதிலில்..., சட்டென தான் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திய நேன்ஸி, அவரை நிமிர்ந்து பார்த்தார்.

    நான் உங்ககிட்டே கலந்து பேசாமல்..., எல்லா முடிவையும் நானே எடுத்துட்டேன்னு கோபமா...? சாரி..., நான் உங்ககிட்டே கேட்டிருக்கணும். ஆனா..., அந்த நேரம்..., எனக்கு இப்படியெல்லாம் ஆகும்னு தெரியாதுங்க.., கண் கலங்கியது நேன்ஸிக்கு.

    வேகமாக அவரை நெருங்கிய வேலவன்..., நேன்ஸி, இப்போ யார் உன்னை என்ன சொன்னாங்க. உனக்கு நம்ம குழந்தை மேல இல்லாத உரிமையா...? நான் சாதாரணமாத்தான் சொன்னேன். உன்னை காயப்படுத்திட்டனா...? சாரிம்மா..., அவர் முடிக்கும் முன்னர், வேகமாக அவர் வாயை மூடியவர்,

    என்னங்க... என்கிட்டே போய்..., சாரி எல்லாம் கேட்டுட்டு. விடுங்க..., நான்தான் இப்போல்லாம் ரொம்ப உணர்ச்சிவசப் படுறேன். ஸ்டான்லியை நினைத்தாலே..., ஆனா எனக்கு அவன்மேல் முழு நம்பிக்கை இருக்குங்க. என் பையன் என்னோட நம்பிக்கையை கடைசி வரைக்கும் காப்பாத்துவான், உறுதியாக சொன்னார்.

    நீ சொன்னா சரியாகத்தான் இருக்கும். ஒரு டீச்சருக்குத் தெரியாதா.., தன்னோட மாணவனைப் பத்தி..., வேலவன் நேன்ஸியை வம்பிழுக்க, அது சரியாக வேலை செய்தது.

    "என் புள்ளைக்கு நான் முதல்ல அம்மா..., அதுக்கு பிறகுதான் டீச்சர் எல்லாம். சரி இன்னைக்கு நீங்க பேங்குக்கு போகலையா? இப்படியே பேசிட்டு இருக்கப் போறீங்களா? சரி போற வழியிலேயே என்னை டிராப் பண்ணிட்டி போங்க...

    முதல்ல வாங்க கிளம்பலாம்..., நேரமாச்சு..., வேகமாக கிளம்பிச் சென்றார்கள்.

    காரில் செல்லும்பொழுது, ஸ்டான்லிதான் அவனோட காரை எடுத்துட்டு போகச் சொன்னானே..., அவர் குறும்பாக இழுக்க...,

    ஏன் சொல்ல மாட்டீங்க. பேங்க் ஜிஎம்க்கும், பிசினெஸ் மேனுக்கும் ஆடி கார் ஓகே. ஆனா ஒரு சாதாரண டீச்சருக்கு அது ரொம்ப ஓவர்..., நேன்ஸியும் அதே குரலில் பதில் கொடுக்க, சத்தமாக சிரித்தார் வேலவன். 

    நேன்ஸியின் பள்ளிக்கு முன்னால் கார் நிற்க, காரிலிருந்து இறங்கும் முன்னர், வேலு...., ஸ்டான்லி நம்ம மருமகளை கூட்டி வந்திடுவான் தானே. என்னமோ..., நேன்ஸியின் வேலு என்ற அழைப்பே, அவர் பதட்டத்தில் இருப்பதை உணர்த்த, ஆதரவாக அவர் கரத்தை அழுத்தினார்.

    என்னைவிட உன் பையனை உனக்குத் தெரியுமே நேன்ஸி. கண்டிப்பா அவன் செய்வான்..., நீ போ..., ஆதரவாக உரைத்தார். மனைவிக்கு தைரியம் சொன்னாலும்..., மருமகளின் பிடிவாதம் உணர்ந்தவருக்கும், கவலை மனதை சூழ்ந்தது.

    இவர்களது மனக் குழப்பத்துக்கு காரணமானவனோ..., தானும் அதே குழப்பத்தோடுதான் சென்றான். ICL கம்ப்யூட்டர் சொலுஷன்ஸ்சின் பிரம்மாண்ட பதினைந்து மாடிக் கட்டிடம் அவனை வரவேற்றது.

    அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன், ஆழ்ந்து மூச்சை விட்டவாறு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, காரிலிருந்து இறங்கினான். முதல்நாள் வேலைக்குச் சென்றபொழுது கூட, தான் இவ்வளவு பதட்டமாக இருக்கவில்லை என்பதை நினைவு கூர்ந்தவன் மெல்லியதாக சிரித்துக் கொண்டான்.

    ****கடகடவென ஒலித்த அலாரத்தின் ஓசையில் கண் விழித்த வர்ஷா..., அலாரத்தை நிறுத்திவிட்டு, நிதானமாக எழுந்து அமர்ந்தாள். வழக்கமான ஒரு விடியல்..., இடப்பக்கம் திரும்பி ஜன்னல் வழியாகப் பார்க்க, விடிந்துவிட்டதற்கு அடையாளமாக, ஜன்னல் வழியாக சூரியக் கதிர்கள் மெல்லியதாக எட்டிப் பார்த்தது.

    சற்று நேரம் படுக்கையில் அமர்ந்தவாறே ஜன்னலை வெறித்தவள்..., எழுந்து சென்று ஜன்னல் வழியாகப் பார்க்க, சற்று தூரத்தில் மாட்டுக் கொட்டகையில், தாயும், தம்பியும் பால் கறப்பதை பார்த்தவள், பார்வையைச் சுழற்ற, அவளது தந்தை கிருஷ்ணன் மாட்டுக்கு வைக்கோல் எடுத்துக் கொண்டிருந்தார்.

    பார்வையைத் திருப்பி தன் அறையைப் பார்க்க, மர கட்டில், அதன் அருகில் சிறிய மேஜை, நாற்காலி, அதன் அருகில் ஒரு குளிர் சாதனப் பெட்டி, அவள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லும் லேப்டாப் பேக் அதன்மேல் இருக்க, குளிர்சாதனப் பெட்டியோ, உயிர்ப்பின்றி முடங்கி இருந்தது.

    அதன் அருகில் மைக்ரோ ஓவன்..., காப்பி மேக்கர்..., என சற்று இடுக்கமாக ஆடம்பரமாக இருந்தது அவள் அறை. இரண்டு வருடங்களுக்கு முன்பு..., தனக்கு அத்தியாவசியமாக இருந்தவை, இன்று முடங்கி இருந்ததைப் பார்த்தவள்..., விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.

    டேபிள் மேல், இருந்த அந்த புகைப்படத்தை கையில் எடுத்தவள்..., இமைக்க கூட மறந்து பார்வையை அதில் நிலைக்கவிட்டாள். மணக்கோலத்தில்..., அர்வியின் அருகில் நான்..., இப்பொழுது பரவசமாகத் தோன்றிய அந்த உணர்வு...,

    அன்று வேம்பாக கசந்ததால்..., புகைப்படத்தில் இறுக்கமாக இருந்தது அவள் முகம். வாழ்நாளில் ஒரே ஒருமுறை நடக்கும் நிகழ்வு..., அதன் அருமை தெரியாமல் நடந்து கொண்டேனே..., அவள் மனம் இன்று வருந்தியது.

    இன்று வருந்தி என்ன பலன்..., காலம் கடந்த ஞானோதையம்.., இதனால் என்ன பலன்...? எதையாவது மாற்ற முடியுமா...? நிராசையாக கண்கள் புகைப்படத்தில் பதிய...,

    அர்வி..., சாரி..., சாரி பார் எவ்ரிதிக் ஐ ஹேவ் டன்..., அவள் இதழ்கள் சன்னமாக முணுமுணுக்க, தன் இதழை அந்த புகைப்படத்தில் ஒற்றியவள், தன் மார்போடு அதை அணைத்துக் கொண்டாள்.

    அவனிடம் நேரில் சொல்ல முடியாத இந்த வார்த்தைகளை, அவனது நிழல் உருவத்திடம் நாள் தவறாமல் உரைக்கிறாள். பலன் என்ன...?

    எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ..., மனமே இல்லாமல் அதை டேபிளில் வைத்தவள், அலமாரியைத் திறந்து, மாற்றுடையை எடுத்தவள், பின்கட்டில் இருந்த பாத்ரூமில், பல்விளக்கி குளித்தவள் பர்பி டாலாக வெளியேறினாள்.

    அம்மா..., அவள் அழைப்பு செவியில் விழுந்தாலும், கண்டுகொள்ளாமல் பால் கறப்பதிலேயே அவர் முனைந்திருக்க, தம்பி வெங்கடேசன் அவளைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தான்.

    அவனைப் பார்த்து தானும் புன்னகைத்தவள், வீட்டுக்குள் செல்லத் திரும்பினாள். அக்கா..., பிளாஸ்கில் காபி இருக்கு, எடுத்துக்கோ.., அவன் குரலைக் கேட்டவன், தலையை அசைத்துவிட்டு அறைக்கு விரைந்தாள்.

    தன் பீரோவைத் திறந்தவள்..., வெள்ளை நிற லெக்கின்சையும், வயலட்டில் பூ போட்ட டாப்பையும் அணிந்தவள், வெள்ளை நிற ஷாலை எடுத்து, கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டாள்.

    முகத்துக்கு அளவான ஒப்பனை, உதட்டில் மெல்லிய உதட்டுச் சாயம், கழுத்தில் ஒற்றை சங்கிலி, கையில் மெல்லியதாக இரண்டு வளையல், இடக்கையில் டைட்டன் ராகா கை கடிகாரம்.., வெண்ணையில் செய்த தேகம், சற்று மஞ்சள் கலந்த வர்ணத்தில், சற்று மெலிந்த உடல் வாகில்,

    மெலிந்த தேகத்தால்...., உயரம் சற்று அதிகமாக எடுத்துக் காட்ட, அம்சமாக இருந்தாள் வர்ஷா. கண்களில் மெல்லிய சோகம், அதையும் தாண்டிய ஒரு வசீகரம், தன் லேப்டாப் பேகை எடுத்தவள், அறையை விட்டு வெளியே வர, மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகள், பிளாஸ்டிக் டீபா..., இவை மட்டுமே அங்கே இடம் பெற்றிருந்தன.

    அந்த டீபா மீது பேகை வைத்தவள், கிச்சனுக்குச் செல்ல, அங்கே இருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ் அவளை வரவேற்றது. சமையல் மேடையின் ஓரத்தில் ஒரு ப்ளாஸ்க் இருக்க, அதை எடுத்து, திறந்தவள், பீங்கான் கப்பில் ஊற்றி, சொட்டு விடாமல் குடித்து முடித்தாள்.

    கெட்டியான பாலில் தயாரித்ததால்..., பில்ட்டர் காப்பியின் சுவை அலாதியானதாக இருந்தது. ஆனாலும்..., இதை தாயே தன் கரத்தில் நேரடியாக கொடுத்திருந்தால்..., இதை எண்ணும் பொழுதே..., கண்கள் கலங்கத் துவங்கியது.

    ‘அழுவதற்குத்தான் இந்த ஜென்மம் முழுவதும் இருக்கிறதே..., பிறகு ஏன் காலையிலேயே துவங்க வேண்டும்...’, தலையைச் சிலுப்பியவள், தன் அறைக்கும், இந்த முழு வீட்டுக்கும் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து வேதனைப் பட்டாள்.

    ஆறிலக்கத்தில் சம்பளம் வாங்கும் தன் வீடு இருக்கும் நிலைமை..., எண்ணியவளுக்கு..., இவை எல்லாம் என்னால் தானே..., என்ற தன்னிரக்கம் தோன்றி அவளை ஆட்டி வைத்தது.

    ஒரு நிமிடம் கண்களை மூடி நின்றவள், அருகில் இருந்த ஹாட் பாக்ஸைப் பார்த்தாள். அதில் இருந்த சூடான இட்டலியில் இரண்டை உண்டவள்..., தன் பேகை எடுத்துக் கொண்டு பின் காட்டுக்குச் சென்றாள்.

    அம்மா..., நான் ஆபீஸ் போயிட்டு வாரேன். சாயங்காலம் லேட்டாதான் வருவேன்..., தாயிடம் உரைத்தவள், தந்தையைப் பார்க்க, அவரோ முகத்தை திருப்பிக் கொண்டு, மாட்டுக்கு வைக்கோல் போட்டுக் கொண்டிருந்தார்.

    தாயோ, தந்தையோ தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசப்போவதில்லை என்பது தெளிவாக தெரிந்த பிறகும்..., அவளால் அவர்களிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் அவர்கள் சொல்வதையும் கேட்க முடியாமல்..., தனக்குள் தவித்தாள்.

    அக்கா..., நீங்க போயிட்டு வாங்க..., வெங்கி உரைக்க, அவன் தலையை வாஞ்சையாகத் தடவியவள், ஸ்கூல் போகலையா வெங்கி.., நீயும் ஏன் இப்படி கஷ்டப் படணும்...? நான்தான் ஸ்கூல் பீஸ் கட்டுறேன்னு சொல்லுறேனே..., உனக்கும் இந்த அக்காவோட காசு வேண்டாமா...?, வேதனையை குரலில் காட்டாமல் இருக்க நினைத்தாலும், குரல் தடுமாறியது.

    அக்கா..., என்னக்கா இப்படி பேசுற..., அம்மா அப்பாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாதுக்கா. அதையெல்லாம் விடு, சாப்ட்டியா...? சாப்பாடு எடுத்துட்டு போன்னு சொன்னால்.., கேக்க மாட்டேங்குற..., ஆற்றாமையாக புலம்பினான்.

    என்னால் அவங்களுக்கு ஏன் சிரமம்.., விடு.., நான் ஆபீஸ்லயே பாத்துக்கறேன். சரி வாரேன்..., சொன்னவள்..., வீட்டை விட்டு வெளியேறினாள்.

    இடது தோளில் தொங்கிய லேப்டாப் பேகை கெட்டியாக பிடித்தவாறு, வாசலில் இறங்கியவள், தன் வெஸ்பா ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து அதில் ஆரோகணித்து, பயணத்தைத் துவங்கினாள்.

    அந்த அக்ரகாரமே அவள் செல்வதை வேடிக்கை பார்த்து, தங்களுக்குள் முணுமுணுக்க, எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை. இது எனக்குப் பழக்கம்தான் என்பதுபோல் நடந்துகொண்டாள். வண்டியை உச்ச வேகத்தில் விரட்டினாள்.

    கார் வாங்கும் அளவு வசதி அவளுக்கு இருந்ததுதான். ஆனால்.., இரண்டு வருடத்திற்கு முன்பிருந்த வர்ஷாவாக இருந்திருந்தால் கண்டிப்பாக அதை நிறைவேற்றி இருப்பாள். ஆனால் இன்று இருக்கும் வர்ஷா எதையும் விரும்பவில்லை.

    என்றும் இல்லாமல், இன்று மனம் மிகுந்த அலைப்புறுதலோடு இருந்தது. ‘இன்று என்னவோ நடக்கப் போகிறது...’, அவள் உள்மனம் அடித்துச் சொல்ல, ‘இதற்குமேல் பெரிதாக எதுவும் நடந்துவிடாது....’, அதே மனம் பதில் கொடுக்க, யோசனையோடே அலுவலகம் வந்து சேர, ICL கட்டிடத்தின் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவள்..., லிப்ட்டை நோக்கிச் சென்றாள்.

    காலம் – 2

    உயிருக்குள் சுமக்கும் உன்னை

    அருகில் பார்த்தேன்.......

    தொட்டுவிடும் தூரத்தில் நீ......

    தொடமுடியாத தவிப்பில் நான்....

    லிப்ட்டுக்குள் நுழைந்த ஸ்டான்லி, ஒன்பதாம் தளத்துக்குச் செல்லும் பொத்தானை அழுத்திவிட்டு காத்திருக்க, அவன் கட்டளையை வாங்கிய மின்தூக்கி, இடையில் நின்று..., மற்ற தளங்களில் இருந்த ஆட்களையும் சுமந்துகொண்டு, அவனை ஒன்பதாம் தளத்தில் இறக்கியது.

    மின்தூக்கியில் இருந்து வெளியேறியவன், ஒரு நிமிடம் நின்று சுற்றிலும் பார்வையைச் செலுத்தினான். தன் லேப்டாப் பேகில் இருந்து கடிதத்தை வெளியில் எடுத்தவன், வலப்பக்கம் திரும்பி, ஜிஎம் டிகோஸ்டா என்ற பெயர்ப்பலகை தாங்கிய கதவின் முன்னால் வந்து நின்றான்.

    ஒற்றை விரலால் தட்டியவன், அனுமதிக்காக காத்திருக்க..., எஸ்..., கரகரப்பான குரல் உள்ளிருந்து கேட்கவே, கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான்.

    அவன் நுழைந்தவுடன், தானியங்கி கதவு தானாகவே மூடிக்கொள்ள, சுழல் நாற்காலியில் நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வயது மதிக்கத்தக்க டிகோஸ்டா, தலைக்கு அடித்த டையோடு, தன் வயதை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டவராய்..., இவன் பார்வைக்குக் கிடைத்தார்.

    யூ..., மிஸ்டர் ஸ்டான்லி..., வெல்கம்..., டேக் யுவர் சீட்...., இருக்கையில் அமர்ந்தவாறே அவனை வரவேற்கும் விதமாக கை குலுக்கி அவனை அமரச் சொன்னார்.

    ஹாய் யங் மேன்..., வெல்கம் டு ICL..., பெரிய இடத்தில் இருந்தே உத்தரவு.., அப்படின்னா..., உங்க திறமை என்னன்னு அதிலேயே எனக்குப் புரியுது..., நுனி நாக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினார்.

    நன்றி..., கண்டிப்பா என் திறமையை நான் நிரூபிப்பேன்..., தானும் ஆங்கிலத்தில் மொழிந்தவன்..., அடுத்து என்ன என்பதுபோல் அவரைப் பார்த்தான்.

    நிச்சயமா..., ஐ’ம் வெய்டிங் டு சீ தட்...., கொஞ்சம் நக்கலாகச் சொன்னாரோ..., ஸ்டான்லியின் நீல விழிகள் அவரை கூர்மையாகப் பார்த்தது.

    டிகோஸ்டா சட்டென தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டவர்..., உன் நீல விழிகள் ரொம்பவே அழகு..., வெரி செக்ஸி டூ..., பாராட்டுதலாக உரைத்து, முந்தைய பேச்சை தவிர்க்க முயன்றார்.

    ஓ..., நன்றி...., எந்தவிதமான பந்தாவும் இல்லாமல், சட்டென அவர் பாராட்டை ஏற்றுக் கொண்டான்.

    உன்னை நான் இவ்வளவு சீக்கிரம் இங்கே எதிர் பார்க்கவில்லை..., தாமதமாகத்தான் வருவாய் என்று எண்ணினேன், தன் லேப்டோபில் சில பட்டங்களை அழுத்தியவாறு அவனிடம் உரைத்தார்.

    எங்கேயும் தாமதமாகச் சென்று எனக்கு பழக்கம் இல்லை...., நேர்மையாக உரைத்தான்.

    இந்த பதிலை ப்ராஜெக்ட் முடிப்பதில் காட்டினால் நன்றாக இருக்கும்.., ஏனோ அவருக்கு அவனை பிடிக்கவில்லை என்பதை வார்த்தைகளில், தன்னை மீறி வெளிப்படுத்தினார்.

    நிச்சயமாக..., நீங்கள் கொடுக்கும் நாளுக்குள் ப்ராஜெக்ட்டை உங்களிடம் ஒப்படைப்பது என்னோட கவலை..., சற்று சூடாகவே பதில் கொடுத்தான்.

    தட்ஸ் குட்..., உடனே தளைந்து போனார்.

    சார்..., என்னோட முதல் ப்ராஜெக்ட் என்னவென்று நான் தெரிஞ்சுக்கலாமா...?, பேச்சை வேலையில் திருப்பினான்.

    அவனது சாதுர்யத்தை மனதுக்குள் மெச்சியவர்..., sure..., சொன்னவர், தனக்கு எந்தவிதமான ப்ரோக்ராம் வேண்டும் என்பதையும், கஸ்டமர் எதை விரும்புகிறார் என்பதையும் விளக்க, அவற்றை கவனமாகக் கேட்டவன்..., தன் லேப்டோபில் குறிப்பெடுத்துக் கொண்டான்.

    இடை இடையே தனது ஐடியாக்களையும், சந்தேகங்களையும் அவன் கேட்க, கணினியில் அவன் ஒரு சூரன் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டார்.

    "வெல்டன் ஸ்டான்லி..., இந்த ப்ராஜெக்ட் ரொம்பவே பக்காவா வரும் என்பதில் எனக்கு இப்போ எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த ப்ராஜெக்ட்டை கேட்டிருக்கும் கம்பெனியை அவ்வளவு சீக்கிரம் சேட்டிஸ்ஃபை செய்ய முடியாது.

    நம்மளோட பெர்பெக்ட் வேலையை, திறமையை வாங்காமல் விட மாட்டார்கள். ஆனா..., நீங்க அவங்களுக்கு கண்டிப்பா ஈடுகொடுப்பீங்கன்னு நான் நம்புறேன்..., இப்போ உங்க டீம் மெம்பர்ஸை பார்க்கப் போகலாமா...? ஷால் வீ..., டிஸ்கஷனின் முடிவில், அவனைப் பாராட்டியவர், முதலில் தான் அவன்மேல் கொண்டிருந்த சிறு கோபத்தை கூட கைவிட்டிருந்தார்.

    எனவேதான் அவனை பாராட்டவும் செய்தார். ஏற்கனவே அவனது இடத்தில் இருந்த ப்ராஜெக்ட் மேனேஜரை  தூக்க சொல்லிவிட்டு, சிலபட ஆயிரம் டாலர்களில் இவனை வேலைக்கு வைக்கும் அளவுக்கு இவன் என்ன உசத்தி என்ற கோபமே, அவன்மேல் முதலில் பாய்ந்தது.

    அதைவிட எங்கும் இல்லாத புதுமையாக, அவனுக்கு தனி அறை வேறு..., அவருக்கு கொஞ்சம் எரிச்சலைக் கிளப்பியிருந்தது என்னவோ உண்மை.

    ஆனால்..., தான் சொன்ன குறிப்பு, தேவைகளில் இருந்தே..., முழு ப்ராஜெக்ட் இந்த வடிவில் வரும்.., இவையே வழிமுறை என்பது வரை அவன் சிலமணி நேரங்களில் கணித்துவிட..., ஸ்டான்லி அதற்கு தகுதியானவன் என்ற முடிவிற்கு அவர் வந்துவிட்டார்.

    ஆனாலும் வெளிப்படையாக அதை காட்டிக்கொள்ள மனமில்லாமல்..., மேலோட்டமாக சொல்லி நிறுத்திவிட்டார்.

    sure..., போகலாம்..., சொன்னவன் தன் லேப்டாப்பை ஸ்லீப் மோடில் போட்டுவிட்டு, உடனடியாக அவரோடு கிளம்பிவிட்டான்.

    அவர் அறையில் இருந்து வெளியேறி, காரிடாரில் நடந்து, அவன் அறைக்கு அழைத்துச் சென்றவர், அங்கிருந்த தொலைப்பேசியில் இரு எங்களை அலுத்தியவர், டீம் கெட் இன்..., சொன்னவர் தொலைபேசியை அதன் இடத்தில் வைத்தார்.

    ஸ்டான்லி..., திஸ் இஸ் யுவர் ரூம். தே வில் ரீச் சூன்...., அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே அறைக்கதவு தட்டப்பட..., எஸ்.., அனுமதி அளித்தார்.

    ஒருவர் பின் ஒருவராக..., இரு ஆணும், இரு பெண்ணுமாக மொத்தம் நால்வர் உள்ளே வந்தார்கள்.

    ஹாய் கைஸ்..., ஹி இஸ் யுவர் நியூ ப்ராஜெக்ட் மேனேஜர், ஸ்டான்லி அரவிந்த், அவர் சொன்ன மறு நிமிடம் இரு பெண்களும் ஸ்டான்லியின் பக்கம் ஆர்வமும் அதிர்ச்சியுமாக திரும்பினார்கள்.

    ஒருத்தியின் பார்வை தவிப்பும், ஆர்வமும்.., நம்ப முடியாத தன்மையுடனும் அவனை மொய்க்க, மற்றவளோ..., கோபமும், ஆத்திரமுமாக அவனை முறைத்தாள்.

    ஸ்டாலி..., திஸ் இஸ் ரோஹித், திஸ் இஸ் பாலா, திஸ் இஸ் கவிதா, திஸ் இஸ் வர்ஷா..., திஸ் இஸ் யுவர் டீம். யூ கேரிஆன், ஐ’ம் மூவிங்..., முறையாக அவர்களை அறிமுகப்படுத்தியவர், அறையிலிருந்து வெளியேறினார்.

    ஹாய்..., ஆண்களிடம் விறைப்பாக கை குலுக்கியவன், ஹல்லோ..., மெல்லிய சிரிப்புடன், கவிதாவின் பக்கம் கை நீட்ட.., வெடுக்கென அவன் கரத்தை தள்ளி விட்டவள்..., அவன் பார்வையில் கண்டிப்பை உணர்ந்து, ஒரு உதட்டு சுழிப்புடன் கை நீட்டினாள்.

    ஹல்லோ..., வர்ஷாவின் பக்கம் அவன் கை நீட்ட..., கையை நகர்த்த முடியாமல் நகர்த்தி, அவன் கரம் சேர்த்தாள். விழிகளோ அவன் முகத்தை விட்டு இம்மியும் அசையவில்லை. அவன் கரத்தை விடுவித்தது கூட தெரியாமல்..., கரத்தை அப்படியே வைத்திருந்தாள்.

    ‘அர்வி...’, அவள் மனம் கூக்குரலிட்டது. முழுதாக மூன்று வருடம்..., அதில் கொடுமையாகக் கழிந்த இரண்டு வருடங்கள்..., அவன் உருவத்தை கண்களுக்குள் சிறை பிடித்து, இதயப் பெட்டகத்தில் அடைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

    அவன் கண்கள் தன்னைப் பார்க்கின்றதா...? அதில் ஆர்வம் தெரிகின்றதா..? காதல் வழிகின்றதா...? ஆசையும் எதிர்பார்ப்பும் போட்டி போட..., அவன் விழிகளையே தொடர்ந்தாள்.

    அந்தோ பரிதாபம்..., அதில் அவளை தெரிந்ததாக ஒரு சுவடு கூட தென்படவில்லை. ‘இல்லை அப்படி இருக்காது..., என் அர்வி அப்படி இருக்க மாட்டார்..’, அவள் மனம் துடிக்க...., எங்கே கண்ணீர் வந்தால் அவன் உருவம் மங்கலாகிவிடுமே என்ற தவிப்புடன், கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு இமை மூடாமல் அவனைப் பார்த்தாள்.

    அவளுக்கு.., அவனிடம் மிகவும் பிடித்த நீலக் கண்கள்..., இனிமேல் பார்க்கவே முடியாதோ என்று தான் ஏங்கி இருந்த விழிகள்..., அவன் விழிகள் என்னை சந்திக்காதா...? அவள் ஏக்கம் புரிந்தவன்போல்..., அவள் பக்கம் பார்த்தான். ஆனால்....,

    அவன் பார்வை அவளை சந்தித்ததுதான்..., அவள் எதிர்பார்த்தது போல், அவள் கண்களோடு உறவாடவோ..., நிலைக்கவோ இல்லை. மாறாக..., வெகு இயல்பாக அவள் பார்வையைக் கடந்து சென்றது. ஆனால் அருகில் நின்ற கவிதாவிடம் மட்டும்..., அவன் பார்வை நிலைத்து, குறும்பாக சிரித்தது.

    அவனது நீலவண்ணக் கண்கள் சிரிக்கும் அழகில்..., தன்னைத் தொலைத்தவள், அது கவிதாவிடம் என்பதில் மிகுந்த கோபம் கொண்டாள். ஆனாலும் மற்றொரு மனமோ..., உனக்கு அதற்கு என்ன உரிமை இருக்கிறது..., அவள் மனம் இடித்துரைத்தது.

    ஸ்டான்லி தங்கள் ப்ராஜெக்ட் பற்றி பேசியதோ..., அவர்களது பார்ட் என்னென்ன என்பதைப் பற்றி விளக்கிய எதுவும் அவள் செவிகளைத் தீண்டவே இல்லை.

    எப்படித் தீண்டும்..., அவள்தான் அவன் தலைமுதல் கால்வரை ஆராய்ந்து கொண்டிருந்தாளே. மூன்று வருடங்களுக்கு முன்னர்..., விடலைப் பருவத்தில், முதிர்ந்த மாணவனாக அவனைப் பார்த்த தோற்றத்திற்கும், இப்பொழுது..., முழு ஆண்மகனாக அவனைப் பார்ப்பதற்கும் இருக்கும் வித்தியாசம்..., ‘இவன் என் கணவன்..., என்னவன்...’, மனம் பெருமிதமாக எண்ணிய அதே நேரம்...,

    ‘அதைத்தான் நீ கொட்டிக் கவிழ்த்து விட்டாயே...’, மனசாட்சி இடித்து உரைக்க..., அதை ஜீரணிக்க முடியாமல் மனம் நைந்தாள்.

    அவனது கையசைப்பு, இதழ் பிரித்து அவன் பேசும் பாங்கு.., தாடையைத் தடவும் அவனது மேனரிசம்..., ஒவ்வொன்றையும் ரசித்த அவளால்..., அவனது பார்வை அடிக்கடி கவிதாவின் பக்கம் சென்று..., சமாதானம் செய்யும் விதமாக..., சுருங்கி விரிந்து கெஞ்சும் அழகை மட்டும் ரசிக்க முடியவில்லை.

    ‘நான்தானே உன் பொண்டாட்டி.., என் முன்னாடியே இன்னொருத்தியை பாப்பியா...?", அவன் சட்டையைப் பிடித்து உலுக்கும் ஆவேசம் இருந்தபொழுதும், நீ செய்த தவறால் தானே இப்படி..., என்ற மனசாட்சியின் கேள்விக்கு...,

    Enjoying the preview?
    Page 1 of 1