Vous êtes sur la page 1sur 3

02.05.

10 ெதாடர்கள்

நாட்கள் ேபாலீஸுசுக்கு டிமிக்கி ெகாடுத்துவிட்டு ஒளிந்து ெகாண்டிருந்த கள்ளச் சாமியாைர


ேபாலீஸ் பிடித்துவிட்டதால், இப்ேபாது நம்முைடய கைதயின் இைடச்ெசருகலாக சில அவசர
விஷயங்கைள எழுத ேவண்டியிருக்கிறது.

ேபாலீஸ் துைறயில் நைகச்சுைவயாகப் புழங்கும் ஒரு கைத உண்டு. ஆற்றின் ஓரமாக ஒதுங்கிய
பிணத்ைத ஒரு ேபாலீஸ்காரர் தன் லத்தியால் நதியின் மறுபக்கத்ைத ேநாக்கித் தள்ளிக்
ெகாண்டிருந்தாராம். என்ன விஷயம் என்று ேகட்டேபாது, ”சவம் இந்தப் பக்கம் ஒதுங்கினால் எங்கள்
ஏாியா ஸ்ேடஷனுக்கு அநாவசிய ேவைல; எதிர்ப்பக்கம் ேபாய்விட்டால் அந்த ஏாியா
ேபாலீஸ்காரர்கள் பார்த்துக் ெகாள்வார்கள்’’ என்றாராம் அவர்.
நித்யானந்தா விஷயத்திலும் இவ்வாறு நடந்துவிடக் கூடாது என்ேற அவரால் பாதிக்கப்பட்ட
ஆயிரக்கணக்கான மக்கள் நிைனக்கிறார்கள். ஏெனன்றால், பிடதி ஆசிரமம் கர்நாடகாவில்
இருந்தாலும் அவரால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்கள்தான். வீரப்பன் விஷயத்தில் கர்நாடகாவும்
தமிழ்நாடும் இைணந்து ெசயல்பட்டைத இங்ேக ஞாபகப்ப டுத்திக் ெகாள்ள ேவண்டும். வீரப்பனாவது
காட்டு மிருகங்கைளத்தான் அழித்தான். ஆனால் நித்யானந்தாேவா, மக்களின் மத உணர்வுகைளப்
புண்படுத்தியேதாடு ஏராள மான குடும்பங்கைளப் பாழ்படுத்தியிருக்கிறார். இளம்ெபண்கைள
ெபற்ேறாாிடமிருந்து பிாித்து பிரம்மச்சாாினி என்ற ெபயாில் தனக்கு அடிைமகளாக்கி இருக்கிறார்.
பல் லாயிரம் ேபாின் ெசாத்துக்கைள அபகாித்திருக்கிறார். அப்படிச் ேசர்த்ததுதான் அவாிடம் இருக்கும்
5000 ேகாடி ரூபாய்.

இப்ேபாது இமாச்சலப் பிரேதசத்தில் ஒரு குக்கிராமத்தில் ஒளிந்து ெகாண்டிருந்தவைர ேபாலீஸ் சுற்றி


வைளத்துப் பிடித்தேபாதும் அவாிடம் 3 லட்ச ரூபாயும், 7000 அெமாிக்க டாலரும் இருந்திருக்கிறது.
உலகத்திேலேய இவ்வளவு ெபாிய பணத்ைத பாக்ெகட் மணியாக ைவத்திருக்கும் சாமியார் இவர்
ஒருவராகத்தான் இருப்பார் என்று ேதான்றுகிறது. பரவாயில்ைல; 5000 ேகாடி ெசாத்துக்கு இந்த
பாக்ெகட் மணி கம்மிதான்!

விஷயத்துக்கு வருகிேறன். நித்யானந்தாவின் கிாிமினல் ேவைலகளால் பாதிக்கப்பட்டவர்கள்


தமிழர்கள் என்பதால், இந்த விசாரைணைய தமிழக அரசு தன் வசம் எடுத் துக்ெகாள்ள ேவண்டும்.
கர்நாடகாவில் நித்யானந்தாவின் கல்பதரு என்ற ஒருநாள் தியான நிகழ்ச்சி நடக்கும்.
கன்னடத்திேலேய நடக்கும் அந்த நிகழ்ச்சிக்குக் கட்டணம் எதுவும் கிைடயாது. ஆனாலும் அதில்
கலந்துெகாள்பவர்கள் பத்து இருபது ேபர்தான் இருப்பார்கள். இைத நான் பலமுைற பார்த்து
வியந்திருக்கிேறன். ஆனால் இேத கல்பதரு நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடந்தால் ஒருவருக்கான
கட்டணம் ரூ.1000 லிருந்து ரூ.5000 வைர வசூலிக்கப்படும். கலந்து ெகாள்பவர்களின் எண்ணிக்ைக
குைறந்தபட் சம் 5000 ேபர் இருக்கும். இப்ேபாது புாிகிறதா தமிழர்கள் எவ்வளவு இளிச்சவாயர்கள்
என்று? அதனால்தான் ெசால்கிேறன், இப்ேபாதாவது விழித்துக்ெகாண்டு அந்த சாமியாைர
தமிழ்நாட்டுக்கு இழுத்துக்ெகாண்டு வாருங்கள் என்று.
நித்யானந்தா ெசய்த ேமாசடிகள் கணக்கில் அடங்காதைவ. அதற்கு ஒேர ஓர் உதாரணம் மட்டும்
தருகிேறன். சமீபத்தில் என்ைன ஒரு வாசகி சந்தித்தார். ெபயர் ஆனந்தி என்று
ைவத்துக்ெகாள்ேவாம். அவர் ெசான்ன விஷயத்ைதக் ேகட்டு என் ெநஞ்சம் பதறியது. நித்யானந்தா
ஒரு குடும்பத்தில் நுைழந்தால் என்ன ெசய்வார்? அங்குள்ள இளம்ெபண்ைண வசியம் ெசய்து
சாமியாாினி ஆக்குவார். பிறகு கணவைனயும் மைனவிையயும் பிாித்துவிடுவார். ஆனந்திக்கு வயது
வந்த ெபண் குழந்ைத இல்லாததால் அது நடக்கவில்ைல. ஆனால், ஆனந்தியின் கணவைனப்
பிாித்து விட்டார். அைத நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு தன் ஆசிரமத்ைதச் ேசர்ந்த ஒரு
ெபண்ைணேய ெசன்ைனக்கு அனுப்பினார். அந்தப் ெபண், வக்கீலுக்குப் படித்தவர். ஆனந்திக்கு
விவாகரத்து ஆகிவிட்டது. அதற்கு சாமியாாின் வக்கீல் ேகட்ட கட்டணம் எவ்வளவு ெதாியுமா? 15
லட்சம். ஆனந்தியும் அதில் ஒரு லட்சத்ைதக் ெகாடுத்துவிட்டார்.

வழக்கு நடந்துெகாண்டிருக்கும்ேபாேத சாமியார் ஆனந்திைய மூைளச் சலைவ ெசய்து சாமியாாினி


ஆக்க முயற்சித்து அதில் ெவற்றியும் கண்டு விட்டார். ஆனந்தியும் பூணூைல மாட்டிக் ெகாண்டு பிடதி
ஆசிரமத்தில் வனப்பிரஸ்தம் பூண்டவராக மாறினார். ஆனால் இரண்ேட மாதம்தான். ஆனந்தியால்
ஞானானந்த மகராஜின் சித் திரவைதகைளத் தாங்க முடியவில்ைல.

”ெசக்ஸ் டார்ச்சரா?’’ என்று ேகட்ேடன். “இல்ைல; அதற்ெகல்லாம் இளம் ெபண்கள் இருக்கிறார்கள்.


நான் நடுத்தர வயதுப் ெபண். அதனால் எனக்கு ேவறு விதமான டார்ச்சர் ெகாடுத்தார்’’ என்று
ெசால்ல ஆரம்பித்தார் ஆனந்தி.

வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். ஆசிரமத்துக்காரர்கள் எனக்குக் ெகாடுத்த சித்திரவைத பற்றி


ேலசாக எழுத ஆரம்பித்ேதன். ேவறு விஷயங்கள் குறுக்கிட்டு விட் டன. 1000 பக்க ஆங்கிலப்
புத்தகத்ைதக் ெகாடுத்து இரண்ேட மாதங்களில் ெமாழிெபயர்த்துக் ெகாடுங்கள் என்பார்கள். அந்த
ேவைலைய முழுேநரமாகச் ெசய்தாேல கு ைறந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அப்படிப்பட்ட
ேவைலக்கு இரண்டு மாதம் ெகடு விதிப்பார்கள். ஆனால் நான் எழுத்தாளன் என்பதால் என்ைனக்
கடிந்தும் ேகட்க முடியாது. அதனால் நூறு ேபர் மாற்றி மாற்றி இரவும் பகலும் ேபான் ெசய்து
டார்ச்சர் ெகாடுப்பார்கள். ேநாிலும் வருவார்கள். திடீெரன்று காைல ஏழு மணிக்கு ஒரு ேபான்
வரும்.

“நித்யானந்தம் ஐயா’’ என்று ஆரம்பித்து ஓர் ஆள் என் வீட்டு விலாசத்ைத ஒப்பித்து “இதுதாேன ஐயா
உங்கள் வீட்டு முகவாி?’’ என்பார்.

“ஆமாம், ஏன் ேகட்கிறீர்கள்?’’

”ஐயா, நான் இப்ேபாது கச்ேசாி ேராட்டில் இருக்கிேறன். உங்கள் வீட்டுக்


கு வர ேவண்டும். ஏதாவது ேலண்ட்மார்க் ெசால்லுங்கள்.’’

கச்ேசாி ேராட்டிலிருந்து என் வீட்டுக்கு ஐந்து நிமிட தூரம்தான். இப்படி


ஓர் ஆள் வரப் ேபாகிறார் என்ேற எனக்குத் ெதாியாது. அதனால் குழம்பிப்
ேபாய் “எதற்கு இங்ேக வருகிறீர்கள்? என்ன விஷயம்?’’ என்ேபன்.

“லிவிங் என்ைலட்டன்ெமண்ட் ெமாழிெபயர்ப்பு முடிந்திருந்தால் வாங்கிக்


ெகாண்டு வரச் ெசான்னார்கள் சுப்ாியா அம்மா...’’ (சுப்ாியா அம்மா
என்றால் 20 வயதான ஒரு சாமியாாினிப் ெபண்!)

காைலயில் ஏழு மணிக்கு என்ன மாதிாி டார்ச்சர் பாருங்கள்! குரைலக் கடுைமயாக மாற்றிக்ெகாண்டு
”அெதல்லாம் இன்னும் ஆகவில்ைல’’ என்று ெசால்லி ேபாைன ைவ த்து விடுேவன். அன்று நாள்
முழுவதும் ‘வீடு ேதடி வந்தவைர விரட்டி விட்ேடாேம’ என்ற குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்திருப்ேபன்.
அதற்குப் பிறகு ேபான் எதுவும் ெசய்யாமல் திடீெரன்று வீட்டு வாசலில் வந்து நின்று ெகாில்லா
அட்டாக் எல்லாம் ெகாடுக்க ஆரம்பித்தார்கள். எனக்ேக இப்படி என்றால், ஆசிரமத்திேலேய
பிரம்மச்சாாினியாக ேசர்ந்துவிட்ட ெபண்ைண என்ன பாடுபடுத்துவார்கள் என்று ெசால்லவும்
ேவண்டுமா?

ஞானானந்தாைவ ஆனந்தி அவன் இவன் என்ேற குறிப்பிட்டார். நல்ல அழகான இளம் ெபண்களாகப்
பார்த்து தன் பக்கத்தில் ைவத்துக்ெகாண்டு அவர்களுக்கு சின்னச் சின்ன ேவைலயாகக் ெகாடுப்பான்.
ஆனால் எனக்கு, ஒரு வருஷத்தில் முடிக்க ேவண்டிய ேவைலைய ஒேர வாரத்தில் முடித்துக் ெகாடு
என்று ெசால்லி டார்ச்சர் ெசய்வான். என்னால் முடியவில்ைல என்று ெதாிந்தவுடன் சாமியிடம்
ேபாட்டுக் ெகாடுத்துவிடுவான். அவர் என்ைனக் கன்னாபின்னா என்று பலேபர் முன்னிைலயில் தி
ட்டுவார். நான் என்ன ெசான்னாலும் ேகட்க மாட்டார்கள். ஞானானந்தா ஒரு ேசடிஸ்ட்.

ஆனந்தி இன்னும் என்ெனன்னேவா ெசால்லிக்ெகாண்டு ேபானார். ஆனந்தி ஒரு சாஃப்ட்ேவர்


நிபுணர். இரண்ேட மாதத்தில் அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் ேபாய் வானப்பிரஸ்தத்ைத
விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிட முடிவு ெசய்து நித்யானந்தாவிடம் ெசால்லியிருக்கிறார்.
அப்ேபாது அவர் ெசய்த ஒரு காாியம்தான் ஆனந்தியின் 15 ேகாடி ரூபாய் ெசாத்து சாமியாாிடம்
பறிேபாகக் காரணமாக இருந்தது. ஆனந்தி வானப்பிரஸ்தம் ேபாகும்ேபாது தன்னுைடய 15 பவுன்
தாலிையக் கழற்றி சாமியாாிடம் ெகாடுத்திருக்கிறார். ‘ஆசிரமத்ைத விட்டு வீட்டுக்குப் ேபாகிேறன்’
என்று ெசான்னதும் சாமியார் ஆனந்தியின் தாலிைய எடுத்து வரச் ெசால்லித் திருப்பிக் ெகாடுத்தி
ருக்கிறார். அந்தக் கணத்தில்தான் விழுந்துவிட்டார் ஆனந்தி.

ெசன்ைன நகாில் பல ஏக்கர் நிலத்ைத சாமியாருக்கு எழுதிக் ெகாடுத்திருக்கிறார் ஆனந்தி.


படப்ைபயில் மட்டும் மூன்று ஏக்கர். ெமாத்தம் 15 ேகாடி ரூபாய் ெசாத்து. (இப்படிப் பல ேபைர
ஏமாற்றி எழுதி வாங்கிய நிலத்தில்தான் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி என்ைனப் ேபான்ற
ஏமாந்தவர்கைள ஆசிரமவாசிகளாக மாற்றலாம் என்று திட்டம் ேபாட்டார் நித்யானந்தா!)

இதற்குப் பிறகு ஆனந்தியின் வாழ்க்ைக ேமலும் துன்பமாகியது. கணவைனப் பிாிந்து


குழந்ைதகளுடன் வாழ ேவண்டிய நிைல. ைகயிலிருந்த ெராக்கம், ெசாத்து எல்லாம் சாமியாாிடம்
ேபாய்விட்டது. இப்படி ெநாந்து நூலாகியிருந்த ஆனந்தியிடம் ேமலும் பணம் பறிக்கத்
திட்டமிட்டிருக்கிறார் சாமியாாின் ெபண் வழக்கறிஞர். விவாகரத்து வழக்ைக நடத்தியதற்காக மீதி 14
லட்ச ரூபாையக் ெகாடு என்று ேகட்டு ஆனந்திக்கு ஓைல வந்திருக்கிறது. இந்தத் ெதாடைர பல
வழக்கறிஞர்களும் படிப்பார்கள் என்று நம்புகிேறன். ஒரு சாதாரண விவாகரத்து வழக்கு நடத்த
வக்கீல் கட்டணம் 15 லட்சமா? சாமியாாின் வக்கீல் அனுப்பியிருக்கும் பில் நகல்கைள நாேன
பார்த்ேதன். ஆனந்தியின் புகார் மனுைவ முதல்வாின் ‘மக்கள் குைற தீர்க்கும் பிாிவு’க்கு அனுப்பி
ைவக்க மட்டுேம ரூ. 15,000 கட்டணம் என்று ேபாட்டிருக்கிறார் அந்த வக்கீல்! கூாியர் ெசலவுக்கு
ரூபாய் 15,000. சாமியார் ெகாடுத்த பயிற்சி ேபாலும்!

இதுபற்றி சாமியாாின் ெசக்ரட்டாி சதானந்தாவுக்கு ெசன்ற வாரம் ஆனந்தி ேபான் ெசய்தேபாது


சதானந்தா ெசான்ன பதில் என்ன ெதாியுமா? ேகட்டால் உங்கள் ரத்தம் ெகாதிக்கும். இன்ெனாரு
விஷயம். ஆனந்தி கைலத்துைறையச் ேசர்ந்த ஒரு பிரபலமான குடும்பத்ைதச் ேசர்ந்தவர்!

«««

ெசன்ற இதழில் ஓர் அவதார புருஷைரப் பற்றி எழுதியிருந்ேதன் அல்லவா? அவர் ேவறு யாருமல்ல.
‘பாபா’ படத்தின் மூலம் ரஜினிகாந்த் நமக்கு அறிமுகப்படுத்திய மகா அவ்தார் பாபாஜிதான் அவர்.
‘பாபா’ படம் வந்த ேநரத்தில் நானும் கிண்டலாகத்தான் ேபசிக் ெகாண்டிருந்ேதன். பிறகு எனக்ேக
அந்த அனுபவம் கிட்டிய ேபாதுதான் நம்பத் ெதாடங்கிேனன். அந்த பாபாவின் ெபயைர ைவத்து
ேமாசடி ெசய்ததால்தான் மாட்டிக்ெகாண்டார் நித்யானந்தா. அைதயும் ெசால்கிேறன்.

ெதா
(ெத ாடரும்
டரும்)

Vous aimerez peut-être aussi